தமிழகத்தில் 5,652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன்படி இன்றும் தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 46 ஆயிரத்து 633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 983 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவையில் 549 பேர், செங்கல்பட்டில் 319 பேர், திருவள்ளூரில் 282 பேர், சேலத்தில் 280 பேர், கடலூரில் 263 பேர், காஞ்சிபுரத்தில் 189 பேர், கள்ளக்குறிச்சியில் 162 பேர், திருவண்ணாமலையில் 156 பேர், திருப்பூரில் 149 பேர், விழுப்புரத்தில் 142 பேர், திருவாரூரில் 139 பேர், தஞ்சாவூரில் 138 பேர், புதுக்கோட்டையில் 131 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.