தமிழகத்தில் இன்று புதிதாக 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் 485, திருவள்ளூரில் 373, ராணிபேட்டையில் 369, விருதுநகரில் 357, செங்கல்பட்டில் 354, தேனியில் 299, தூத்துக்குடியில் 284, திருநெல்வேலியில் 222 பேர், வேலூரில் 191, மதுரையில் 173 பேருக்கு இன்று வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேரும் திருவள்ளூரில் 10 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.