தமிழக சட்டப்பேரவைக்கு திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த புதன்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“கொரோனா காலத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அடுத்த கட்டமாக நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி நடத்தி முடிப்போம்” என்று சுனில் அரோரா தெரிவித்தார். இதன்படி தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.