தமிழகத்தில் கொரோனா தொற்று 2,000-க்கு கீழாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 44,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,28,795 ஆக உயர்ந்துள்ளது. இதில் 81,15,580 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 49,079 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 92.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 4,84,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 547 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,28,668 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 4,496 பேருக்கு கொ தொற்று ஏற்பட்டது. 17,36,329 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,05,064 பேர் குணமடைந்துள்ளனர். 85,583 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,682 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 2,116 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,55,912 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,14,949 பேர் குணமடைந்துள்ளனர். 29,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,474 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 1,728 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,49,705 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,22,011 பேர் குணமடைந்துள்ளனர். 20,857 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,837 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 1,933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. புதிய தொற்று 2,000-க்கு கீழாக குறைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 7,54,460 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர். 17,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 14 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,454 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் பாதிப்பில் உத்தரதேசம் 5-வது இடத்திலும் கேரளா 6-வது இடத்திலும் இருந்தன. கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலம் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு இதுவரை 5,14,060 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4,34,730 பேர் குணமடைந்துள்ளனர். 77,390 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,822 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 2,267 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,05,426 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,75,175 பேர் குணமடைந்துள்ளனர். 22,949 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,302 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நேற்று 7,053 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,67,028 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4,16,580 பேர் குணமடைந்துள்ளனர். 43,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,332 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் நேற்று 3,856 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 4,20,840 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,81,149 பேர் குணமடைந்துள்ளனர். 32,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,506 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசாவில் 986 பேர், தெலங்கானாவில் 997 பேர், பிஹாரில் 607 பேர், ராஜஸ்தானில் 2,176 பேர், அசாமில் 202 பேர், சத்தீஸ்கரில் 1,817 பேர், ஹரியாணாவில் 2,788 பேர், குஜராத்தில் 1,282 பேர், மத்திய பிரதேசத்தில் 1,046 பேர், பஞ்சாபில் 685 பேர், ஜார்க்கண்டில் 269 பேர், காஷ்மீரில் 617 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.