தமிழக சுகாதார துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் கொரோனாவுக்கு உயிர்பலியாகி உள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று குறைந்து வந்தது. புதிய வைரஸ் தொற்று 5 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தொற்று எண்ணிக்கை கூடி 6 ஆயிரத்தை தொடும் வகையில் சென்றுள்ளது.
சென்னையில் வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஆயிரத்து 91 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.