தமிழகத்தில் 6,972 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத் துறை நாள்தோறும் மாலையில் கொரோனா புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 956 பேர் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 73 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது.


மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 107 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் 577, திருவள்ளூரில் 486, செங்கல்பட்டில் 365, மதுரையில் 346, திருநெல்வேலியில் 385, தூத்துக்குடியில் 380 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *