தமிழகத்தில் இன்று 26,465 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை வைரஸ் வியாபித்து பரவி வருகிறது. கொரோனா முதல் அலையின்போது தமிழகத்தில் அதிகபட்சமாக 7,000 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டது.
தற்போது தினசரி தொற்று 20 ஆயிரத்தை தாண்டி, 30 ஆயிரத்தை தொடும் வேகத்தில் தடதடத்து ஓடுகிறது. தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மிக அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,154 பேர், கோவை மாவட்டத்தில் 2,101 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,384 பேர், மதுரை மாவட்டத்தில் 1,051 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மருத்துவமனைகள், கொரோனா மையங்கள், வீடுகளில் 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். மிக அதிகபட்சமாக சென்னையில் 33,024 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.