தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 74 ஆயிரத்து 167 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 480 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 261 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
மதுரையில் 379, திருவள்ளூரில் 300, செங்கல்பட்டில் 273, வேலூரில் 160, தூத்துக்குடியில் 141, காஞ்சிபுரத்தில் 133, கன்னியாகுமரியில் 115 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,700 ஆக உயர்ந்துள்ளது.