தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது.
மதுரையில் 450, திருவள்ளூரில் 360, விருதுநகரில் 328, செங்கல்பட்டில் 264 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 324 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளனர். 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வருக்கு கொரோனா இல்லை
தமிழக அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்க மணி ஆகியோருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.