கொரோனா.. இந்தியாவில் 75,809 பேர்.. தமிழகத்தில் 5,684 பேர்…

கொரோனா.. இந்தியாவில் 75,809 பேர்.. தமிழகத்தில் 5,684 பேர்…பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 75 ஆயிரத்து 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக புதிய தொற்று 90 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 80 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 42 லட்சத்து 80 ஆயிரத்து 422 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 33 லட்சத்து 23 ஆயிரத்து 950 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,133 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 72,775 ஆக உயர்ந்துள்ளது.

 கொரோனா.. இந்தியாவில் 75,809 பேர்.. தமிழகத்தில் 5,684 பேர்…பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில்

மகாராஷ்டிராவில் புதிதாக 16 ஆயிரத்து 429 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 9 லட்சத்து 23 ஆயிரத்து 641 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 292 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 423 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தின் ஒட்டுமொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் புதிதாக 8 ஆயிரத்து 368 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 5 லட்சத்து 6 ஆயிரத்து 493 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 74 பேர் குணமடைந்துள்ளனர். 97 ஆயிரத்து 932 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 ஆயிரத்து 487 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில்

கர்நாடகாவில் புதிதாக 5 ஆயிரத்து 773 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 324 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக போலீஸ்காரரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக போலீஸ்காரரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

இதில் 3 லட்சத்து 770 பேர் குணமடைந்துள்ளனர். 97 ஆயிரம் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 6 ஆயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 62,144 பேர், தெலங்கானாவில் 31,670 பேர், அசாமில் 28,798 பேர், ஒடிசாவில் 27,938 பேர், சத்தீஸ்கரில் 24,708 பேர், மேற்குவங்கத்தில் 23,216 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 3 ஆயிரத்து 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 92 ஆயிரத்து 515 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68 ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர். 23 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில் உள்ளனர். 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 5,684 பேர்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் குணமடைந்துள்ளனர். 50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் இன்று 988 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கோவையில் 446 பேர், கடலூரில் 407 பேர், செங்கல்பட்டில் 364 பேர், திருவள்ளூரில் 277 பேர், திருவண்ணாமலையில் 242 பேர், திருவாரூரில் 198 பேர், சேலத்தில் 164 பேர், வேலூரில் 148 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *