தமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 92 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 43 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 20 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதில் 8 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 32 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

கர்நாடகா

வைரஸ் பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 583 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 922 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 8 ஆயிரத்து 218 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 17 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 81 ஆயிரத்து 763 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 302 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

நான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 5 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3 லட்சத்து 48 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 66 ஆயிரத்து 874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதுவரை 8 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 568 பேர், கடலூரில் 297 பேர், சேலத்தில் 291 பேர், செங்கல்பட்டில் 283 பேர்,

திருவள்ளூரில் 207 பேர், திருப்பூரில் 169 பேர், தஞ்சாவூரில் 162 பேர், காஞ்சிபுரத்தில் 156 பேர், கன்னியாகுமரியில் 133 பேர், நாமக்கல்லில் 131 பேர், நீலகிரியில் 130 பேர், விழுப்புரத்தில் 127 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

6-வது இடத்தில் உள்ள கேரளாவில் 4 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

மாநிலத்தில் 1,35,721 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளனர். 39 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 535 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *