தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 98,392லிருந்து 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 2,082
சென்னையில் மட்டும் இன்று 2,082 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,585ல் இருந்து 64,689 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,385 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 330
செங்கல்பட்டில் 330, மதுரையில் 287, திருவள்ளூரில் 172, வேலூரில் 145, காஞ்சிபுரத்தில் 121 பேருக்கு இன்று புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போதும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.