தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக வைரஸ் தொற்று 4 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிதாக 3,616 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 71,116 பேர் குணமடைந்துள்ளனர். 45,839 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
மாவட்டவாரியாக அதிகபட்சமாக சென்னையில் 1,203 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மதுரையில் 334, விருதுநகரில் 253, திருவள்ளூரில் 217, திருநெல்வேலியில் 181, தூத்துக்குடியில் 144, ராணிபேட்டையில் 125, கன்னியாகுமரியில் 119, வேலூரில் 117, காஞ்சிபுரத்தில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,636 ஆக உயர்ந்துள்ளது.