இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி உறுதி

தமிழக முதல்வர் பழனிசாமி தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு செய்து வருகிரார். அப்போது திண்டுக்கல்லில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


“இ-பாஸ் நடைமுறையில் ஊழல் நடைபெறக்கூடாது என்பதில் தமிழக அரசு கண்டிப்புடன் உள்ளது. மக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்படும். இ-பாஸ் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 குழுக்கள் அமைக்கப்படும். அத்தியாவசிய தேவை, உண்மையான காரணங்களுக்கு மட்டுமே மக்கள் இ-பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *