சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதன்பிறகு ஆளுநருடன் தொடர்பில் இருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.