அரசு ஊழியர் பணி 5 நாளாக குறைப்பு

அரசு ஊழியர் பணி 5 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை 9 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தபோது அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பணிக்கான அரசு ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர்.

அதன்படி கடந்த மே மாதம் 50 சதவீத ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. அப்போது சனிக்கிழமையும் வேலைநாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

“வரும் 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது அமலில் உள்ள வாரத்துக்கு 6 நாட்கள் பணி உத்தரவு வாபஸ் பெறப்படும். வாரத்தில் 5 நாட்கள் அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும்” என்று தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *