தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா வைரக் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புதிய வைரஸ் தொற்று 5 ஆயிரத்துக்குள் உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ளனர். 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 108 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 23 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் 424, திருவள்ளூரில் 358, தேனியில் 292, கடலூரில் 264, செங்கல்பட்டில் 245, கோவையில் 228, காஞ்சிபுரத்தில் 220, வேலூரில் 160, தூத்துக்குடியில் 189, திருநெல்வேலியில் 155, சிவகங்கையில் 141 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.