தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா – எம்.பி.க்கள், எம்எல்ஏவுக்கும் வைரஸ் தொற்று

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 109 பேர் பலியாகி உள்ளனர்.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக 5 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 283 பேர் குணமடைந்துள்ளனர். 56 ஆயிரத்து 698 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது.


மாவட்டவாரியாக சென்னையில் இன்று ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராணிபேட்டையில் 382, விருதுநகரில் 348, திருவள்ளூரில் 332, செங்கல்பட்டில் 331, காஞ்சிபுரத்தில் 322, தேனியில் 303, கோவையில் 221, கன்னியாகுமரியில் 215, தூத்துக்குடியில் 214, திருவண்ணாமலையில் 210, கடலூரில் 167, தஞ்சாவூரில் 146, வேலூரில் 132, மதுரையில் 106, திருச்சியில் 101, திருநெல்வேலியில் 85 பேர், தென்காசியில் 75 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், மயிலாடுதுறை திமுக எம்.பி. ரமலிங்கம், ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *