தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்தனர்.
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனினும் புதிய வைரஸ் தொற்று குறையாமல் 6 ஆயிரத்தை தொடுகிறது.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் மிக அதிகபட்சமாக ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டில் 446, காஞ்சிபுரத்தில் 393, திருவள்ளூரில் 317, விருதுநகரில் 337, தேனியில் 309 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
நாகை லோக்சபா எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளருமான செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.