கொரோனா…. தமிழகத்தில் 5,956 பேர்.. இந்தியாவில் 78,512 பேர்…

கொரோனா தொற்றால் தமிழகத்தில் 5,956 பேர், இந்தியாவில் 78,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 91 பேர் உயிரிழப்பு

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 4 லட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 68 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 52 ஆயிரத்து 578 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 91 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 7,322 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,150 பேரும் கோவையில் 589 பேரும் செங்கல்பட்டில் 347 பேரும் கடலூரில் 307 பேரும் திருவள்ளூரில் 299 பேரும் காஞ்சிபுரத்தில் 187 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் 971 பேர் உயிரிழப்பு

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 36,21,245 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,74,801 பேர் குணமடைந்துள்ளனர். 7,81,975 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 971 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 64,469 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 16,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 7,80,689 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5,62,401 பேர் குணமடைந்துள்ளனர். 1,93,889 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 24,399 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 10,004 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த மாநிலத்தில் 4,24,767 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3,21,754 பேர் குணமடைந்துள்ளனர். 99,129 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 3,884 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 8,800 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 3,35,928 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,42,229 பேர் குணமடைந்துள்ளனர். 88,110 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 5,589 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 54,666 பேர், தெலங்கானாவில் 31,299 பேர், ஒடிசாவில் 27,219 பேர், மேற்குவங்கத்தில் 25,657 பேர் பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் நேற்று 1,530 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அந்த மாநிலத்தில் 51,542 பேர் குணமடைந்துள்ளனர். 23,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டு வந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சுகாதாரத் துறை பட்டியல் தயாரிக்கிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழகம் 4-வது இடத்தில் இருந்தது. தற்போது உத்தர பிரதேசம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகம் 5-வது இடத்துக்கு சென்றுள்ளது.

உலகளாவிய அளவில் 2 கோடியே 55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியை 78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8 லட்சத்து 52 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 61 லட்சம் பேரும் பிரேசிலில் 38 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்தியா 2-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *