தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாள்களாக புதிய வைரஸ் தொற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கூடி வந்தது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக வைரஸ் தொற்று இன்று சிறிது குறைந்திருக்கிறது.

1.14 லட்சம் பேர் பாதிப்பு


தமிழக அரசு இன்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 3,827 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 61 பேர் பலி


மாவட்டவாரியாக சென்னையில் இன்று புதிதாக 1,747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 245, செங்கல்பட்டில் 213, காஞ்சிபுரத்தில் 182, திருவள்ளூரில் 175, தேனியில் 119, தூத்துக்குடியில் 109, திருநெல்வேலியில் 84 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *