தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 049 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் புதிதாக 2,182, மதுரை 297, செங்கல்பட்டு 226, திருவள்ளூர் 147, காஞ்சிபுரத்தில் 86 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 52,926 பேர் குணமடைந்துள்ளனர். 39,856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் 60,539, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5,648, திருவள்ளூர் மாவட்டத்தில் 3,978, காஞ்சிபுரத்தில் 2,067 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 36,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாள்தோறும் 3,500-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிடும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.