தமிழகத்தில் 5,835 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 ஆயிரத்து 439 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.


தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 5,397 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் 989 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 7-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழாக தொற்று பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் 453, திருவள்ளூரில் 390, கோவையில் 289, தேனியில் 286, கடலூரில் 258, காஞ்சிபுரத்தில் 243, விருதுநகரில் 219, திருநெல்வேலியில் 189, கன்னியாகுமரியில் 185, திருச்சியில் 161, மதுரையில் 151, தூத்துக்குடியில் 94, பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *