தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 426 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்ட வாரியாக சென்னையில் ஆயிரத்து 117 பேருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 540, திருவள்ளூரில் 382, திருநெல்வேலியில் 382, காஞ்சிபுரத்தில் 373, விருதுநகரில் 370, தூத்துக்குடியில் 316, கோவையில் 289, மதுரையில் 225, கன்னியாகுமரியில் 202, தஞ்சாவூரில் 188, ராணிப்பேட்டையில் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் நெரிசல் மிகுந்த தலைநகர் டெல்லியில் வைரஸ் தொற்று குறைந்து கொண்டே வருகிறது. டெல்லி அரசின் மாதிரியை தமிழகத்திலும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.