தமிழகத்தில் சனிக்கிழமை 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 4,280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 4000-ஐ தாண்டி உள்ளது.
ஒரே நாளில் 65 பேர் பலி
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,842 பேர்
மாவட்டவாரியாக சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,538 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் 352, திருவள்ளூரில் 251, செங்கல்பட்டில் 215, ராமநாதபுரத்தில் 149, காஞ்சிபுரத்தில் 134 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.