செப். 7 முதல் தமிழகத்தில் 18 சிறப்பு ரயில்கள்

செப்.7 முதல் தமிழகத்தில் 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இதன்படி தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் ரயில்களை இயக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரயில், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோவை, திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்படி சென்னை எழும்பூர்-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- கோவை சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,

சென்னை எழும்பூர்- தூத்துக்குடி பேரல்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய 6 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில், கோவை – மயிலாடுதுறை ஜன்சாதப்தி சிறப்பு ரயில், சென்ட்ரல் – கோவை இன்டர் சிட்டி அதிவிரைவு ரயில் ,

சென்டரல் – கோவை சிறப்பு அதிவிரைவு ரயில் , கோவை – எழும்பூர் சிறப்பு ரயில் உள்ளிட்ட 5 சிறப்பு ரயில்களும் செப். 7 முதல் இயக்கப்பட உள்ளன.

ஒட்டுமொத்தமாக 18 சிறப்பு ரயில்கள் ஓடத் தொடங்க உள்ளன. இவை அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இயக்கப்படும்.

முன்பதிவு செய்தால் மட்டுமே சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முடியாது. இதில் சாதாரண 2ம் வகுப்பு பெட்டிகள் கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *