சென்னை நந்தனத்தில் வசித்து வந்த எழுத்தாளர் சா.கந்தசாமி (வயது 80) இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அவர் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ரோஹினி என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்த கந்தசாமி, சாயாவனம் என்ற நாவல் வாயிலாக எழுத்தாளராக அறிமுகமானார். கடந்த 1998-ல் விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு, இந்திய திரைப்பட தணிக்கை குழுவில் பணியாற்றியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.