அகவிலைப்படி வழங்க கோரி ஆக.31 -ல் ஆர்ப்பாட்டம் – அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

அகவிலைப்படி வழங்க கோரி ஆக.31 -ல் ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது

அரசு ஊழியர் சங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு மாவட்டம், பவானியில் மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது.

மாநில துணைத் தலைவர் மு.மகாவிஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் விரிவாக எடுத்துரைத்தார்.

அகவிலைப்படி வழங்க கோரி அரசு ஊழியர் சங்க  செயற்குழு கூட்டம்
அகவிலைப்படி வழங்க கோரி அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

நிதிநிலை அறிக்கையினை மாநில பொருளாளர் எம்.வெங்கடேசன் முன்வைத்தார். சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் குரல் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

புத்தகத்தை காணொளி காட்சி வாயிலாக முன்னாள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி வெளியிட்டு வாழத்துரை வழங்கினார்.

முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகவிலைப்படி

1.7.2021-ம் தேதி முதல் ஒன்றிய அரசு அறிவித்தது போன்று 11 சதவிகிகம் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். முன்னாள் TNGEA மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து அவருடைய ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும்.

அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

தேர்தல் கால வாக்குறுதிப்படி CPS-யை ரத்து செய்து பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

1.4.2003-ம் தேதிக்குப்பின்னர் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த காலம், தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.

அரசு துறையில் காலியாக உள்ள காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள், மேல்நிலை நீர்தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வமான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைந்திட வேண்டும். கட்டணமில்லா சிகிச்சையினை உறுதிப்படுத்திட வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும்.

அதே போல் கடந்த காலங்களில் வழங்கியது போன்று ஏ மற்றும் பி பிரிவினருக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்.

உயர்கல்விக்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கி வந்த ஊக்க ஊதிய உயர்வு மற்றும் சார்நிலை அலுவலர் கணக்கு தேர்வு பாகம் 1-க்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வுகளை ரத்து செய்த அரசாணைகளை திரும்ப பெற்றிட வேண்டும்.

கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்

காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கும் ஓராண்டும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

அகவிலைப்படி உயர்வை வழங்க மறுப்பதைக் கண்டித்தும் உரிய தேதியில் அகவிலைப்படியை வழங்கக் கோரியும் 31.8.2021 அன்று கோரிக்கை அட்டையுடன் கூடிய கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவது, நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.9.2021 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *