கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி

வரும் 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.

பல்வேறு தளர்வுடன் கொரோனா பொது ஊரடங்கு டிசம்பர் மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச. 7-ம் தேதி தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரிகள் டிச. 7-ல் திறக்கிறது. 

டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம். சுற்றுலாதலங்கள், பொருட்காட்சி அரங்குகளுக்கு செல்லவும் தடையில்லை. 

சமூக, அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களை 200 பேருடன் நடத்திக் கொள்ளலாம். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து இதர மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *