இரவு 10 மணி வரை டாஸ்மாக் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த மே 17-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.
நவம்பர் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்தபடி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.