4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் செயல்படும்

டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 6-ம் தேதி வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. தொற்று பரவல் காரணமாக பார்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *