போலி வேலைவாய்ப்பு: டாடா எச்சரிக்கை

போலி வேலைவாய்ப்பு தகவல்கள் குறித்து டாடா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாடா நிறுவனத்தில் வேலைக்கு ஆள்கள் சேர்க்கப்படுவதாக கூறி சில மோசடி நபர்கள் பணம் வசூல் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து டாடா நிறுவனம் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL), டாடா சன்ஸின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவன வேலைவாய்ப்பு நடைமுறை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்புக்காக நாங்கள் யாரிடமும் பணம் வசூல் செய்வது கிடையாது. வேலைவாய்ப்பு தொடர்பாக தவறான தனிநபர், நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றங்களுக்கு TEPL பொறுப்பேற்காது என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *