40,000 பேருக்கு வேலை – டிசிஎஸ் திட்டவட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி) பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்களை வழங்காததால் ஆட்குறைப்பு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


எனினும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்) வழக்கம்போல ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறும்போது, “கடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 40 ஆயிரம் பேரை பணிக்கு தேர்வு செய்தோம். அதேபோல இந்த ஆண்டும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளது.


விப்ரோ நிறுவனம் கூறும்போது, “கொரோனா காலக்கட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்போம்” என்று உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *