ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுட்காலமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.
இதன்காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அரசுப் பணி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை ஆயுட்காலத்துக்கும் செல்லும்படி நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது. இனிமேல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோர் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.