ஸ்ரீசைலத்தில் தீ.. 9 பேர் பலி…

ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் தீ விபத்து நேரிட்டது. இதில் 9 பேர் பலியாகினர்.

ஸ்ரீசைலம் அணைக்கட்டின் தெலங்கானா பிரிவில் நீர்மின் நிலையம் உள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு திடீரென மின் கசிவு ஏற்பட்டு, புகை சூழ்ந்தது. அப்போது சுமார் 30 பேர் பணியில் இருந்தனர்.

ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயால் கரும் புகை சூழ்ந்தது.
நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயால் கரும் புகை சூழ்ந்தது.

அங்கிருந்த பொறியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.
தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 9 பொறியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீநிவாஸ் கவுட், வெங்கட் ராவ், மோகன் குமார், உஜ்மா பாத்திமா, சுந்தர், ராம்பாபு, கிரண், மகேஷ் குமார், வினீஷ் குமார் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துல்ளது.

தீ விபத்து ஏற்பட்ட ஸ்ரீசைலம் நீர் மின் நிலையம்.
விபத்து ஏற்பட்ட ஸ்ரீசைலம் நீர் மின் நிலையம்.

தெலங்கானா மின் வாரியத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி மற்றும் உயரதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

இதுகுறித்து தெலங்கானா அரசு வட்டாரங்கள் கூறும்போது, ” ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் 110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு தீ விபத்து ஏற்பட்ட உடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

தீயை அமைக்க போராடும் ஊழியர்.

இதனால் பெரும் உயிரிழப்பு, பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து நேரிட்ட நேரத்தில் 19 பேர் பணியில் இருந்துள்ளனர். இதில் 10 பேர் உயிர் தப்பிவிட்டனர்.

9 பேர் புகை மூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் பரிதாபமாக பலியாகினர்” என்று தெரிவித்தனர்.உயிர் தப்பிய 10 பேரில் 6 பேருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்ரீசைலம் அணையில் இருந்து சீறிப் பாயும் தண்ணீர்.இங்குதான் நீர் மின் நிலையம் அமைந்துள்ளது.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் நடைபெற்ற தீவிபத்து குறித்து சிஐடி விசாரணை நடத்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட தலைவர்கள் ஸ்ரீசைலம் தீ விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *