கோயில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சின்ன நீலங்கரையில் உள்ள சக்தி முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆர்டிஓ அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் விசாரித்தார்.
“கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.