கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசியல், மதம், சமூக நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2-வது அலை தீவிரமாக இருப்பதால் அரசியல், மதம், சமூக நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்தது.

இதனால் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக அரசு, நிலையான வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனினும் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *