தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இதற்கான வழிகாட்டு நெறிகளை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் இரவு 8 மணிக்குள் மூடிவிட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை.

வழிபாட்டுத் தலங்களில் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பரஸ்பரம் வாழ்த்துகளை கூறும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

வழிபாட்டசுத் தலங்களுக்குள் பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். வழிபாட்டுத் தலங்களின் நுழைவு வாயில்களில் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய சோப்பு, சானிடைசர் வைக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

எந்த இடத்திலும் எச்சில் துப்பக்கூடாது. கோயில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் கடைகள், ஓட்டல்கள் செயல்பட்டால் அங்கும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பக்தர்கள் இடைவெளி விட்டு நிற்க வசதியாக தரையில் குறியீடுகளை இடலாம். கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழியையும் வெளியே செல்ல ஒரு வழியையும் ஏற்படுத்த வேண்டும்.

சுவாமி சிலைகள், புனித நூல்களை கண்டிப்பாக தொடக்கூடாது. சன்னதி, புனித இடத்துக்குள் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோயில்களில் பிரசாதம் வழங்கக்கூடாது. புனித நீரை தெளிக்கக்கூடாது.

தொழுகைகள் நடத்தும்போது பொதுவான விரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக விரிப்புகளை பயன்படுத்த வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் உணவு சமைக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய கோயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை அமல்படுத்தப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் வரும்போது தங்கும் விடுதிகள், அறைகளை ஒதுக்கக்கூடாது.

இயல்பு நிலை திரும்பும் வரை திருவிழாக்கள், உர்சவங்கள், திருவீதி உலாக்கள் போன்றவற்றில் பங்கேற்க அனுமதியில்லை” என்று தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *