தமிழகத்தில் 1,212 ஒப்பந்த நர்ஸ்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அமைந்துல்ள அரசு மருத்துவமனைகளில் 1,212 நர்ஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக் கோரி அவர்கள் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் 1,212 நர்ஸ்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இவர்கள் முதல்கட்டமாக சென்னையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவார்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.