மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அந்த நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு 3 ஆயிரத்து 785 நூலகங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக சிறப்பு குழு அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு எடுப்பார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இப்போது யோசிக்கும் நிலை இல்லை. இதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார்.
தமிழகத்தில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.