தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய முதல்வர் தலைமையில் தொழில்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு (வயது 100) தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்படுகிறது. இதனை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா தெரிவித்துள்ளார்.