நாற்பது சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளருக்கு தமிழக அரசின் சாதாரண பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த சலுகையைப் பெற நடத்துநரிடம் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் லால்வேனா பிறப்பித்துள்ளார்.