திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மாஸ்க் இலவசம்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படும். கழிப்பிடங்களில் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்யப்படும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு முன்னுரிமை தரப்படும். டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *