தமிழக டிஜிபியின் சைலேந்திரபாபுவின் அடுத்த மாஸ்டர் பிளான்

தமிழகத்தில் ரவுடிகள் கவுன்டன் ஸ்டார்ட்டாகியிருக்கிறது. அதற்கு சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த கொடூர கொலை சம்பவங்களே காரணம். அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு, அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார். அது என்னவென்றால் தமிழகத்தில் ஏ பிளஸ், ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸார் களமிறங்கினர். ஸ்டார்மிங் ஆபரேஷன் என பெயரிடப்பட்டு விடிய விடிய ரவுடிகளை தேடும் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த ரவுடிகளைப் பிடித்தனர்.

இந்த ஆபரேஷனில், 36 மணி நேரத்தில் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 733 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து நெல்லைக்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, காவல் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கூலிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சென்னையை பொறுத்தவரை 23-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி காலை வரை நடந்த storming operation-ல் 716 ரௌடிகள், பழைய குற்றவாளிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன. அதில் கொலை வழக்கில் தொடர்புபடைய 57 பேரும் இதர வழக்கில் தொடர்புடைய 13 பேரும் என 70 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 20 ஆயுரதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 18 குற்றவாளிகளிடமிருந்து பிணையபத்திரம் மூலம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டிருக்கிறது என கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆபரேஷனுக்காக தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீஸார், ரவுடிகள் பதுங்கியிருந்த இடங்களுக்கு நள்ளிரவில் சென்று அவர்களை சுற்றி வளைத்துப்பிடித்தனர். சில ரவுடிகள் கள்ளக்காதலிகள் வீடுகளில் பதுங்கியிருந்தனர். இன்னும் பெரிய ரவுடிகள் தமிழகத்தை விட்டு கர்நாடகா, ஆந்திரா, மும்பை என வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

ஏற்கெனவே டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றபோது ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் dare என்ற ஆபரேஷனைத் தொடங்கி செயல்படுத்தினார். சென்னையில் பிரபலமான ரவுடிகள் சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, கல்வெட்டு ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் நடந்த பழிக்குப்பழியாக நடந்த கொலை சம்பவங்களையடுத்து storming operation நடத்தப்பட்டிருக்கிறது.

நடிகர் வடிவேலைப் போல நானும் ரவுடிதான் என்ற ரேஞ்சில் புதுசு புதுசாக ஏரியாக்களில் ரவுடிகள் உருவாகிவருகின்றனர். அதில் சிறுவர்களும் 30 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரும் உள்ளனர். குவாட்டருக்கும் பிரியாணிக்கும் கொலை நடக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அதை இரும்புகரம் கொண்டு தடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தமிழகம் அமைதி பூங்காவாகவே இருக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *