நீட் தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளும் இணையத்தில் வெளியிடப்பட்டது.

ஏதாவது பிழை இருந்தால் மாணவர்கள் தக்க ஆதாரங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த காலக்கெடு கடந்த 17-ம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வெகு விரைவில் நீட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *