கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார். இதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.