சென்னைப் போலீஸாருக்கு மனநல பயிற்சி

சென்னையில் உள்ள போலீஸாருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட கமிஷனர் சங்கர் ஜிவால், காவலர்களுடன் கலந்துரையாடினார்.

உலக மன நல நாளை முன்னிட்டு சென்னை காவல்துறையில் பணிபுரியும் மனஅழுத்தத்திற்குள்ளான காவல் அதிகாரிகள், ஆளுநர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் ஒருநாள் சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்பில் கமிஷனர் சங்கர்ஜிவால்

கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் காவல் குடும்பத்தினருக்கு அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மனநல பயிற்சியில் போலீஸார்

அதன்தொடர்ச்சியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து மத்திய குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் ஒருநதள் சிறப்பு முகாமில் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்து பேசினார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட காவலர்களிடம் கலந்து பேசி அவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகாமல் பணிபுரிய கமிஷனர் அறிவுறுத்தினார்.

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள்

இந்த பயிற்சி முகாமில் மாஸ்டர்மைன்ட் பவுண்டேசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் லட்சுமி, அபிலாஷா, சுஜாதா, அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கமிஷனர் தலைமையிடம் பாலாஜி சரவணன், உதவி கமிஷனர்கள் உள்பட 105 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *