நவ. 10 முதல் தியேட்டர்களை திறக்கலாம்

வரும் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மல்டி பிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான தியேட்டர்களிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளில் ஒரே நேரத்தில் 150 பேர் வரை பணி செய்யலாம். எனினும் படப்பிடிப்புகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *