தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மனிதநேயம் – எஸ்.பி ஜெயக்குமாரின் கொரோனா கிளாஸ்


தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார். அப்போது கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விரிவாக பேசினார்.


கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால், கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இது, மகிழ்ச்சியளித்தாலும் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள், வருமானத்தை இழந்து சிரமப்பட்டுவருகின்றனர். அதனால் மனிதநேயமிக்கவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை தமிழகம் முழுவதும் செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் ஊர்காவல்படையினர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா நிவாரண பொருள்களாக அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

பின்னர் அவர் பேசியதாவது, ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றும் உங்கள் ஒவ்வொருவரின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது, எல்லோரும் இரவு, பகல் பாராமல் மிக சிறப்பாக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊர்க்காவல் படையினருக்கும், ஆங்காங்கே நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து ஊர்க்காவல் படையினருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். நேற்று ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திலும் இன்று தூத்துக்குடி உட்கோட்டத்திலும் வழங்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று பணிக்கு சென்றாலும் சரி, எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும் மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் இரண்டு முககவசங்களை அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் இந்த வைரஸ் தாக்கத்தலிருந்து நாம் விடுபட முடியும் என்றார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர். கோமதி, கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர். ஷோபா ஜென்சி, கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தவராஜ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *