புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதில் 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை திட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
“மும்மொழிக் கொள்கை குறித்த முழுமையான விவரங்கள் கிடைத்த பெற்ற பிறகு முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும். நடப்பாண்டு 20 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்கள்.
நாட்டிலேயே முதல்முறையாக வரும் 3-ம் தேதி முதல் தொலைக்காட்சி வழி கல்வி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் யூ டியூப் மூலமாகவும் பாடங்களை பதிவிறக்கம் செய்து பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.